போலீசார் அபராதம் விதிப்பதை கைவிடக்கோரி மினி வேன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட மினி வேன் டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் வீரமுத்து ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட மினி வேன் டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் வீரமுத்து ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மினி வேன்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும், கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்கவேண்டும், திருச்சி நகரில் போலீசார் மினி வேன் டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், அமைப்பு செயலாளர் வேதநாராயணன். பொது செயலாளர் சந்திரன் ஆகியோர் பேசினார்கள்.
Related Tags :
Next Story