நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கட்டிட தொழிலாளி சாவு

குளித்தலை,
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கோவக்குளம் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் வடிவேல். இவர் திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராமகிருஷ்ணன்(வயது 58) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குளித்தலை அருகே உள்ள அய்யனூருக்கு கட்டிட வேலை செய்வதற்காக சென்றுகொண்டிருந்தார். குளித்தலை- மணப்பாறை சாலையில் இரும்பூதிபட்டி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென வந்த நாயின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story