மரபணு மாற்று விதைகளை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சார்பில் நடந்தது

சீர்காழியில், மரபணு மாற்று விதைகளை தடை செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சீர்காழி,
சீர்காழியில், மரபணு மாற்று விதைகளை மத்திய-மாநில அரசுகள் தடை செய்ய வலி யுறுத்தி விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். கொள்ளிடம் விவசாய சங்க தலைவர் சிவபிரகாசம், அறக்கட்டளை துணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கருமுத்து வரவேற்றார். இதில் நூல் ஆசிரியர் பாலாஜிசங்கர், வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிர மணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மரபணு மாற்று விதைகளை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும், மனிதர் களுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும், விவசாயமும், சிறு வணிகர்களும் முற்றிலும் அழியும் சூழ்நிலை உண்டாகும். பாரம்பரிய விதைகள் அழிவதுடன், விதைகளுக்காக பன்னாட்டு நிறுவனத்திடம் கையேந்தும் அவலநிலை ஏற்படும். எனவே, மண்ணுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மரபணு மாற்று விதைகளை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. நமது பாரம்பரிய விதைகளை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் வக்கீல் கணிவண்ணன், பொறியாளர் சங்க தலைவர் பால்ராஜ், முன்னாள் ரோட்டரி சங்க துணை ஆளுனர் பிரசாந்த்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story