புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்


புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே மேலபுத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட னர். இதில் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பைங்காட்டூர் ஊராட்சி மேலபுத்தூர் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த மதுக்கடையை மூடக்கோரி நேற்று மதுக்கடை முன்பு வாலிஓடை, பைங்காட்டூர், மேலப்புத்தூர், செல்லத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 14 மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம மக்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த காமாட்சி, விஜி, விஜயா ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க., அ.தி.மு.க., மன்னை தாலுகா விவசாய சங்கம் ஆகியவை ஆதரவு அளித்தன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல உதவி மேலாளர் ராஜகோபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உஷாதேவி (மன்னார்குடி), ராஜேந்திரன் (தலையாமங்கலம்) ஆகியோர் அங்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story