அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு


அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Aug 2017 7:45 AM IST (Updated: 10 Aug 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

சேலம்,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத் திரியை பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும், உடல்நிலைக்குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேர மருத்துவர் கிடையாது. அதனால் இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் சேலம், ஓமலூர், மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது. அதனால் ஜலகண் டாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்க வேண்டு மென கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பெற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக இரவு நேர மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியை பார்வையிட்ட போது அவருடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மேட்டூர் தாசில்தார் செந்தில் குமார், சங்ககிரி எம்.எல்.ஏ. ராஜா, ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஜலகண்டாபுரம் கூட்டுறவு வங்கித்தலைவர் மாதையன், எடப்பாடி ஒன்றியச் செயலாளர் மாதேஸ் வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

எடப்பாடி பகுதியில் சுகாதாரத்துறை மூலம் நடைபெறும் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான அதிகாரிகள் கலந்தாய்வு முகாம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இம்முகாமில் கலந்து கொள்ள அமைச்சர் விஜய பாஸ்கர் வந்தார்.
அவருடன் திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன், சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரை முருகன், தாசில்தார் சண்முக வள்ளி மற்றும் பலர் வந்தனர். பின்னர் சுகாதார விழிப்புணர்வு குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்தும் சுகாதார அதிகாரிகள் மருத்து வர்களிடம் கேட்டறிந்து பேரணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் எடப் பாடி அரசு ஆஸ்பத்திரி வரை நடந்து சென்றார். அப்போது சாலை ஓரத்தில் உள்ள வீடுகள், கடைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்த நோயாளி களை பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு அம்மா சஞ்சீவினி மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும் எடுத்து கூறி, துண்டுபிரசுரங்கள் கொடுத்தார்.

Next Story