புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி


புனேயில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Aug 2017 3:27 AM IST (Updated: 10 Aug 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

புனே,

புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் மாருன்ஜி பகுதியை சேர்ந்த 45 வயது நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் காய்ச்சலில் அவதி அடைந்து வந்தார். இதற்காக அவர் ஆதித்யா பிர்லா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்.

இதேபோல அம்பேகாவ் பகுதியை சேர்ந்த 55 வயது நபர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு புனே மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை புனே மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி உறுதி படுத்தினார்.

புனேயில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை 82 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story