உடுப்பி அருகே, எஜமாடி பகுதியில் ரே‌ஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை?


உடுப்பி அருகே, எஜமாடி பகுதியில் ரே‌ஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை?
x
தினத்தந்தி 10 Aug 2017 3:44 AM IST (Updated: 10 Aug 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி அருகே, எஜமாடி பகுதியில் ரே‌ஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து அந்த ரே‌ஷன் கடையில் உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

மங்களூரு,

உடுப்பி அருகே எஜமாடி பகுதியில் ரே‌ஷன் கடை உள்ளது. இந்த கடையில் எஜமாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ரே‌ஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எஜமாடி பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையில் உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரி வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும் ரே‌ஷன் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து ரே‌ஷன் கடையில் இருந்த அரிசியை உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரி வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘ரே‌ஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரின் ரே‌ஷன் கடைக்கு வந்து ஆய்வு நடத்தி உள்ளோம். மேலும் அங்கிருந்த அரிசியை சோதனைக்காக அனுப்பியும் உள்ளோம். சோதனை முடிவில் தான் ரே‌ஷன் கடையில் விற்பனை செய்யப்பட்டது பிளாஸ்டிக் அரிசியா? என்பது தெரியவரும். அதன்பிறகு அந்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.


Next Story