தேனீக்கள் வரைந்த ஓவியம்
தேனீக்களின் ஒவ்வொரு அசைவையும், அதற்கான காரணங்களையும் அறிந்து கொண்டதால், தேனீக்களை கொண்டு ஓவியம் வரைய முடிகிறது.
சீனாவில் வசிக்கிறார் ரென்ரி. இவர் தேனீக்களை வளர்ப்பதில் கெட்டிக்காரர். அதை நிரூபிக்கும் வகையில் தேனீக்களை வைத்து ஓவியங்களை வரைந்து வருகிறார்.
‘தேனீக்களின் ஒவ்வொரு அசைவையும், அதற்கான காரணங்களையும் அறிந்து கொண்டதால், தேனீக்களை கொண்டு ஓவியம் வரைய முடிகிறது. தேனீ கூட்டத்தை ராணித்தேனீ வேலை வாங்க, அந்த ராணி தேனீயை ஓவியம் வரைவதற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். தேனீக்கள் உருவாக்கும் தேன் அடையில் தான் என்னுடைய ஓவியம் மிளிர்கிறது. ஓவியத்திற்கு தேவையான அளவில் தேன் அடையை ராணித் தேனீயைக் கொண்டு உருவாக்க வைக்கிறேன். தேன் கூட்டை ஓவியங்களுக்கு ஏற்ப மாற்றி வைக்க, ராணித் தேனீ மும்ரமாக ஓவியம் வரைகிறது’ என்கிறார், ரென் ரி.
இவர் உலக வரைபடத்தில் தொடங்கி ஏராளமான ஓவியங்களை தேனீக்களைக் கொண்டு வரைந்திருக்கிறார். ஷாங்காய், மிலன், பெய்ஜிங், வெனிஸ் போன்ற நகரங்களில், ரென்னின் தேனீ ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
Related Tags :
Next Story