காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு கடிதம் எழுதும் போட்டி


காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு கடிதம் எழுதும் போட்டி
x
தினத்தந்தி 11 Aug 2017 2:30 AM IST (Updated: 10 Aug 2017 6:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில், பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கான கடிதம் எழுதும் போட்டி நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில், பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கான கடிதம் எழுதும் போட்டி நேற்று நடந்தது.

கடிதம் எழுதும் போட்டி

தேசிய அளவில் கடிதம் எழுதும் பழக்கத்தை அதிகரிக்கவும், தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையிலும் இந்திய தபால் துறை சார்பில், ‘என்னை கவர்ந்த மகாத்மா காந்தி’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நேற்று நடந்தது. தூத்துக்குடி தபால் கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இந்த கடிதம் எழுதும் போட்டி நடந்தது.

668பேர் பங்கேற்பு

தூத்துக்குடியில், தபால் நிலையம் மற்றும் காமராஜ் கல்லூரியில் நடந்த போட்டியை உதவி கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தலைமை தபால் அதிகாரி ராஜா, விற்பனை அதிகாரி மனோகர் தேவராஜன், மேற்பார்வையாளர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 150 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு கடிதம் எழுதினர். இதே போன்று திருச்செந்தூரில் நடந்த போட்டியில் 450 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த போட்டியில் 68 பேரும் பங்கேற்று கடிதம் எழுதினர்.

சிறந்த கடிதங்களுக்கு பரிசு

மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறும் சிறந்த கடிதங்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த கடிதங்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் கடிதங்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரமும், 2–வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3–வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி கோட்ட தபால் காண்காணிப்பாளர் ராமசாமி தலைமையில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.


Next Story