பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 11 Aug 2017 3:30 AM IST (Updated: 10 Aug 2017 8:45 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

நெல்லை,

பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

குடற்புழு நீக்க மாத்திரைகள்

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இந்தியாவில் தேசிய குடற்புழு நீக்க தினத்தன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் குடற்புழுக்கள் அழிவதுடன் உடலில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் அங்கன்வாடி மையம், பள்ளி, கல்லூரிகள் மூலம் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 9 லட்சத்து 23 ஆயிரத்து 986 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. நெல்லை மாநகராட்சி பகுதியில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரத்து 300 பேருக்கு வழங்கப்படுகிறது. கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆயிரத்து 302 மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள்

கூட்டத்தில், சுகாதார பணிகள் துனை இயக்குனர்கள் செந்தில்குமார் (நெல்லை), சோமசுந்தரம் (சங்கரன்கோவில்), மாநகர நல அலுவலர் பொற்செல்வன், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் அப்துல் காதர், கல்லணை பள்ளி தலைமை ஆசிரியை நாச்சியார் என்ற ஆனந்த பைரவி, மருத்துவ அலுவலர்கள் சரவண பிரகாஷ், முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story