கொடைக்கானல் மலைச்சாலையில் பள்ளத்தில் பாய்ந்த பஸ்: 8 பேர் படுகாயம்
கொடைக்கானல் மலைச்சாலையில் பள்ளத்தில் பாய்ந்து பஸ் விபத்துக்குள்ளானதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெரும்பாறை,
கொடைக்கானலில் இருந்து, தேனி மாவட்டம் போடியை நோக்கி நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர். தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஜீவானந்தம் (வயது 55) என்பவர் பஸ்சை ஓட்டினார். கொடைக் கானல்-வத்தலக்குண்டு சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.
பூலத்தூர்-நண்டான்பாறை இடையே வந்தபோது அங்குள்ள வளைவில் பஸ் திரும்பியது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. பின்னர் அங்கிருந்த மரத்தில் மோதி பஸ் நின்றது. இந்த விபத்தில் டிரைவர் ஜீவானந்தம், பஸ்சில் பயணம் செய்த தேனியை சேர்ந்த நாகம்மாள் (50), ஜெயபிரகாஷ் (31), கதிரேசன் (30), பீட்டர்ராஜா (30), கொடைக்கானல் அருகே மச்சூரை சேர்ந்த நந்தினி (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 பேரும் அடங்குவர். அவர்களின் பெயர்கள் ஹாராயில் சாமுவேல் (33), ஜிபா ஷாப்பி (33). இவர்கள் 2 பேரும் கொடைக்கானலை சுற்றி பார்த்து விட்டு மூணாறு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக, போடி நோக்கி பஸ்சில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 8 பேருக்கு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைச்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ், மரத்தில் மோதி நின்று விட்டது. இல்லையெனில் சுமார் ஆயிரம் அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story