கைதிகளிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க கோவை மத்திய சிறையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்
கோவை மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
கோவை,
கோவை மத்திய சிறையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மத்திய சிறை மிகவும் பழமைவாய்ந்த சிறையாகும். கடந்த 1872-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த சிறையில் 1,720 கைதிகள் உள்ளனர். பெண்களுக்கு தனி சிறையும் உள்ளது. சிறை வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் சிறை கைதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
இதுதவிர பல்வேறு நவீன வசதிகள் சிறையில் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை சிறையில் ஏற்கனவே இயங்கி வந்த சிறை கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழகத்தில் 9 சிறைகளில் மூடப்பட்ட சிறை கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்யப்படும். கோவை சிறையில் துணி தயாரிக்கும் சிறிய அளவிலான மில் செயல்பட்டு வருகிறது. இதை நவீனப்படுத்தி சிறைத்துறை காவலர்கள், தீயணைப்பு துறையினர்களுக்கு தேவையான ஆடைகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக சிறைகளில் 15 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இதில் 6 ஆயிரம் கைதிகளுக்கு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. கோவையில் 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 280 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் ஐ.டி. நிறுவனம் தொடங்கப்பட்டு கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி வெளியே செல்லும்போது வேலைவாய்ப்பை பெறலாம். சிறைச்சாலைகள் அனைத்தும் கல்வி சாலைகளாக மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.
சிறைகளில் கைதிகளிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கைதிகளிடம் இருந்து மொத்தம் 283 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறைகளில் செல்போன் புழக்கத்தை தடுக்க புதிதாக 12 ஜாமர் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக சென்னை புழல் சிறைக்கு 2 ஜாமர் கருவிகள் வழங்கப்படும். இதைதொடர்ந்து அடுத்த சில வாரங்களில் கோவை மத்திய சிறையில் 2 ஜாமர் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story