பேராசிரியர்களின் அறிவுரையை ஏற்றால் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
பேராசிரியர்களின் அறிவுரையை ஏற்றால் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று நீதிபதி முகமதுஜியாவுதீன் பேசினார்.
வடவள்ளி,
கோவை மருதமலை மலையடிவாரத்தில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு 5 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, சட்டக்கல்லூரி கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் பலரும் கோவை சட்டக்கல்லூரியை தேர்வு செய்தனர். இந்த ஆண்டு முதல் இந்த கல்லூரியில் தமிழ் வழியில் சட்டப் படிப்புகள் அறிமுகமாகிறது. தமிழ் வழியில் சட்டம் பயிலும் மாணவ- மாணவிகள் அரசு பணியில் சேர அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.
விழாவில் திருப்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி முகமது ஜியாவுதீன் என்ற தமிழினியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-
கோவையில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து முடித்த பலரும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்கள் நீதிபதிகளாகவும், அரசு பதவிகளிலும் உள்ளனர். தற்போது சட்டப்படிப்புக்கு மதிப்பு கூடியிருக்கிறது. மாணவ- மாணவிகள் நல்ல முறையில் படித்து வெற்றி பெற்றால் மாவட்ட நீதிபதிகளாக வரலாம்.
கல்லூரி படிப்பில் சேர்ந்துள்ள நீங்கள், உங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். அவர்கள் கூறும் அறிவுரை வாழ்க்கைக்கு ஏற்றதாகதான் இருக்கும். ஆனால் பலர் அதை கேட்டு நடப்பது இல்லை. எனவே பேராசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

Related Tags :
Next Story