ரூ.1¼ கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு
சூளகிரி ஒன்றியத்தில் ரூ.1¼ கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பணிகள் நடந்து வருகிறது. அவற்றை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார். மேலுமலை ஊராட்சி மல்லசந்திரம் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ. 6 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை கட்டுமான பணிகளையும், பெரியகுதிபாலா கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.16.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகளையும், பெரியகுதிபாலா கிராமத்தில் ரூ. 12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பறை கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதே போல் பல்வேறு இடங்களில் பணிகளை பார்வையிட்டார்
பின்னர் கலெக்டர் கதிரவன் கூறியதாவது:-
முன்வர வேண்டும்
கிராமங்கள்தோறும் தனிநபர் கழிவறை இல்லாத வீடுகளில் அரசு ரூ. 12 ஆயிரம் மதிப்பில் கழிப்பறைகள் கட்டிகொள்ள நிதியுதவி அளித்து வருகிறது. எனவே பொதுமக்கள் வீடுகளில் தங்களுக்கு சொந்தமான இடங்களில் தனிநபர் கழிப்பறைகள் கட்ட முன் வர வேண்டும். இதனால் கிராமங்கள் தோறும் சுகாதாரம் பராமரிக்கப்படுகிறது. ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கிராமங்கள் தோறும் தனிநபர் கழிவறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்து அவர்களிடம் தனி நபர் கழிப்பறை கட்டுவது குறித்து எடுத்துரைத்து கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் மாது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாஸ்கர், அண்ணபூரனி, ஒன்றிய பொறியாளர் சுமதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story