அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது
தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையத்தொடங்கி உள்ளது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தர்ம புரியில் கூறினார்.
தர்மபுரி,
தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள டெங்கு காய்ச்சல் சிகிச்சை வார்டு, வைரஸ் காய்ச்சல் வார்டு, குழந்தைகள் சிகிச்சை சிறப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணியில் 25 ஆயிரம் கள பணியாளர்கள், 3500 சுகாதார ஆய்வாளர்கள், 130 பூச்சியியல் வல்லுனர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் டெங்கு பாதிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 300 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுகாதார தூதுவர்கள்
டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பணியில் பள்ளி மாணவ-மாணவிகள் சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் 416 நகரும் ஆஸ்பத்திரிகள் வாகனங்கள் மூலம் டாக்டர்களுடன் செயல்படுகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. உடனடியாக அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதால் அதை அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
போலி டாக்டர்கள்
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 3 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வருவதால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி நிலைக்கு தரம் உயர்த்த உரிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் 85 முதல் 90 சதவீத பிரசவங்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் நடக்கின்றன. இதனால் அதற்கான வசதியையும் அரசு ஆஸ்பத்திரிகளில் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் 78 போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நல்லம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற டெங்குகாய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவருடைய தலைமையில் மாணவ-மாணவிகள் டெங்குகாய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளையும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், திட்ட இயக்குனர் காளிதாசன், முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story