அரியலூரில் கல்வி மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள்


அரியலூரில் கல்வி மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:00 AM IST (Updated: 11 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் கல்வி மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள்

தாமரைக்குளம்,

அரியலூரில் கல்வி மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றன. போட்டிகளை சாளையக்குறிச்சி பள்ளி தலைமை ஆசிரியை லீலாவதி தொடங்கி வைத்தார். விளையாட்டுப்போட்டிகளில் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் தடகள போட்டிகள் மற்றும் கைப்பந்து ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. தட களம் விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாதாந்திர தடகள போட்டிகள் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்களை மாவட்ட கல்வி அதிகாரி கலைமதி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, பள்ளி கல்வி ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பயிற்றுனர்கள் செல்வம், வில்லாலன் ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story