இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தாயின் 2-வது கணவருக்கு 3 ஆண்டு சிறை
சென்னையை சேர்ந்த கவிதா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 2 வயது இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். இதனையடுத்து அவரது தாய், ஈசாக் (39) என்பவரை மறுதிருமணம் செய்து கொண்டார்.
சென்னை,
கவிதா பெரியவளானதும், ஈசாக் அவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கவிதா வீட்டில் தனியாக இருந்தபோது, அவருக்கு ஈசாக் பாலியல் ரீதியான தொந்தரவுகளை செய்துள்ளார். இதுகுறித்து கவிதா புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈசாக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி கலைமதி நேற்று ஈசாக்கிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட கவிதாவுக்கு ரூ.20 ஆயிரம் தமிழக அரசு இழப்பீடாக வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

Related Tags :
Next Story