ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்த வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் கைது


ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்த வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2017 4:37 AM IST (Updated: 11 Aug 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்த வழக்கில், அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட தாண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவருடைய மனைவி ராணி (40). இவர்களுக்கு மோனிகா (21), ஆர்த்தி (19) என்ற மகள்களும், நவீன்குமார் (17) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் ராஜேந்திரனின் மூத்த மகள் மோனிகா வாழப்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) என்ற ஆட்டோ டிரைவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து மோனிகாவை தங்களுடன் வந்து விடுமாறு ராஜேந்திரன் அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்து விட்டார்.

உறவினர் கைது

இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் கடந்த 6-ந் தேதி தனது மனைவி ராணி, இளைய மகள் ஆர்த்தி, மகள் நவீன்குமார் ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் பகுதியை சேர்ந்த இவர்களது உறவினர் ஜெகன் என்பவர் 4 பேரையும் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Next Story