பாகேபள்ளி தாலுகா அலுவலகம் முன்பு ஆதிதிராவிட அமைப்பினர் தர்ணா
பாகேபள்ளி தாலுகா அலுவலகம் முன்பு ஆதிதிராவிட அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கோலார் தங்கவயல்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் ஆதிதிராவிட இளைஞர்களை, போலீசார் வேண்டுமென்றே கைது செய்து ரவுடி பட்டியலில் அவர்களுடைய பெயர்களை சேர்த்து வருவதாகவும், போலீசாரின் இந்த நடவடிக்கையை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், அப்பாவி ஆதிதிராவிட இளைஞர்களை கைது செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று ஆதிதிராவிட அமைப்பினர் சார்பில் பாகேபள்ளி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆதிதிராவிடர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் போலீசாரைக் கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story