தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு
தமிழகத்தில், கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் கூறினார்.
கோவில்பட்டி,
தமிழகத்தில், கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
அரசு கல்லூரியில் ஆய்வு
கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று மாலையில் ஆய்வு செய்தனர். பின்னர் உயர்கல்வி துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதிய பாடப்பிரிவுகள்
கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் ஆகிய 5 பாட பிரிவுகள் இருந்தன. இந்த ஆண்டில் இளங்கலை பிரிவில் பி.ஏ. வரலாறு, புவி அமைப்பு ஆகிய 2 பாட பிரிவுகளும், முதுகலை பிரிவில் எம்.காம்., எம்.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் ஆகிய 4 பாட பிரிவுகளும் கூடுதலாக தொடங்கப்பட்டு உள்ளன. முதுகலை பாடப்பிரிவில் இந்த ஆண்டு 12 பேராசிரியர்களும், அடுத்த ஆண்டு 12 பேராசிரியர்களும் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 57 கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக 270 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. 37 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் புதிதாக 89 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த கல்வி ஆண்டில் புதிதாக 8 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
கூடுதல் மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே இந்த ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் அனைத்து பாடப் பிரிவுகளிலும் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதேபோன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீத மாணவர்களையும், தனியார் கல்லூரிகளில் கூடுதலாக 10 சதவீத மாணவர்களையும் சேர்த்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த வகையில், வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் அனைத்து கல்லூரிகளிலும் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அன்றைய தினங்களில் மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்ப மனுக்களை வழங்கி, பாடப்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு உயர்கல்வி துறை அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக அவர் கல்லூரி பேராசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கலந்து கொண்டவர்கள்
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜோசப் சுரேஷ், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கூட்டுறவு வங்கி இயக்குனர் அலங்கார பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் அல்லிகண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story