பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை: நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரண்


பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை: நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 12 Aug 2017 2:30 AM IST (Updated: 11 Aug 2017 9:27 PM IST)
t-max-icont-min-icon

பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரணடைந்தார்.

நெல்லை,

பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரணடைந்தார்.

கடை உரிமையாளர் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பனவிளை செருதிகோணம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 44). இவர் திருவட்டார் அருகே செறுகோல் ஓடல்விளை பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி புஷ்பகலா.

புஷ்பராஜூவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (32), ஈச்சன்விளை பகுதியை சேர்ந்த மெர்லின் (32) ஆகியோர் நண்பர்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று புஷ்பராஜ் செல்போனுக்கு மெர்லின் பேசினார். அப்போது செல்போனை புஷ்பகலா எடுத்தார். புஷ்பகலாவிடம், மெர்லின் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ், மெர்லின் வீட்டுக்கு சென்று தனது மனைவியிடம் தவறாக பேசியது குறித்து மெர்லினை கண்டித்தார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மெர்லின், புஷ்பராஜை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

வாலிபர் சரண்

இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மெர்லினை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடிய மெர்லின் நேற்று நெல்லை 5–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி பிஸ்மிதா முன்னிலையில் சரண் அடைந்தார். அவர், மெர்லினை வருகிற 16–ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், 16–ந் தேதி பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

Next Story