சேத்துப்பட்டில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்


சேத்துப்பட்டில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Aug 2017 3:30 AM IST (Updated: 11 Aug 2017 10:51 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகள் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி சேத்துப்பட்டு வேலூர் மறை மாவட்ட கிறிஸ்தவர்கள் கருப்பு நாள் ஊர்வலம் நடத்தினர்.

திருவண்ணாமலை,

மத்திய, மாநில அரசுகள் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகே வேலூர் மறை மாவட்ட கிறிஸ்தவர்கள் கருப்பு நாள் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு செயலாளர் ஞானசேகர் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நாட்டாண்மைதாரர்கள் குமார், பன்னீர்செல்வம், முன்னாள் நாட்டாண்மை அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் திடலில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி அருட்தந்தைகள் அந்தோணிராஜ், லியோ மரியஜோசப், ரிச்சர்ட் ஆகியோர் உரையாற்றினர். இதில் சேத்துப்பட்டு, நிர்மலாநகர், லூர்துநகர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள், பங்கு தந்தைகள் கலந்து கொண்டனர்.


Next Story