கீழகிருஷ்ணன்புதூரில் டெம்போவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


கீழகிருஷ்ணன்புதூரில் டெம்போவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 Aug 2017 4:15 AM IST (Updated: 12 Aug 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

கீழகிருஷ்ணன்புதூரில் டெம்போவில் இருந்து கதம்பைதூள் மூடைகளை இறக்கும்போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மேலகிருஷ்ணன்புதூர்,

ஈத்தாமொழி அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது60). இவர் கீழகிருஷ்ணன்புதூரில் உள்ள ஒரு தும்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்றுமுன்தினம் கேசவன்புதூரில் இருந்து கதம்பைதூள்களை மூடைகளில் கட்டி டெம்போவில் ஏற்றி தும்பாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யாத்துரை ஒவ்வொரு மூடைகளாக இறக்கி கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அய்யாத்துரை கால் தவறி டெம்போவின் மேல் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பரிதாப சாவு

படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story