மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய ரூ.80 லட்சம் கடனுதவி முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்


மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்ய ரூ.80 லட்சம் கடனுதவி முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:30 AM IST (Updated: 12 Aug 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

தொழில் தொடங்குவதற்காக மாற்றுத்திறனாளிகள் 115 பேருக்கு ரூ.80 லட்சம் கடனுதவியை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் இயங்கி வரும் தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து நிதிஉதவியை பெற்று மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கி வருகிறது.

2017–18ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கடனுதவியை வழங்கினார். அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், விஜயவேணி, தீப்பாய்ந்தான், ஜெயபால், புதுவை அரசு மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 116 பயனாளிகளுக்கு ரூ.80லட்சத்து 39 ஆயிரத்து 200 கடனுதவி வழங்கப்பட்டது. இதில் மளிகை கடை, துணி வியாபாரம், பெட்டிக்கடை, கணினி மையம், பொது வியாபாரம் போன்ற தொழில்கள் செய்வதற்கு இந்த கடனுதவி வழங்கப்பட்டன.

இதே போல் கதிர்காமம் தொகுதி பூமியான்பேட்டை பகுதியை சேர்ந்த 22 பயனாளிகளுக்கு புதுவை அரசு வருவாய்த்துறை சார்பில் இலவச மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டன.


Next Story