உறவினர் கொலைக்கு பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய வாலிபர் கைது
சேலம் கன்னங்குறிச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். உறவினர் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரை தீர்த்துக்கட்டியதாக அந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னங்குறிச்சி,
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 13-வது வார்டில் உள்ள கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 42), ஆம்புலன்ஸ் உரிமையாளர். இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஆல்வின் (17) என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு ஒரு வாலிபர் வந்தார். அப்போது வீட்டில் இருந்த பார்த்தீபனை அவர் வெளியே அழைத்துள்ளார்.
உடனே வெளியே வந்த பார்த்தீபனை அந்த வாலிபர் நீள கத்தியால் வெட்ட முயன்றார். அவர் சத்தம்போடவே வீட்டிற்குள் இருந்த ஆல்வின் வெளியே ஓடி வந்தார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அப்போது கீழே விழுந்த பார்த்தீபனை அந்த வாலிபர் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்த பார்த்தீபனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை குறித்து கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பார்த்தீபனின் அண்ணன் அருள்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னங்குறிச்சி 13-வது வார்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் தாயம் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியபிரகாஷ் என்பவரை அருள்சாமி கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாகவே பார்த்தீபன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது.
இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் பார்த்தீபனை கொலை செய்தது சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் இருசப்பன் என்கிற கிருஷ்ணன் (27) என்பது தெரியவந்தது. இவர் தாய விளையாட்டு தகராறில் கொலை செய்யப்பட்ட சத்தியபிரகாசின் உறவினர் ஆவார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று கிருஷ்ணனை கைது செய்தனர்.
கைதான கிருஷ்ணன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட சத்தியபிரகாசும், நானும் உறவினர்கள். அவனது தாய் லட்சுமியின் சித்தப்பா மகன்தான் எனது தந்தை மோகன். உறவினர்களான நாங்கள் இருவரும் நண்பர்களைபோல பழகி வந்தோம். ஆனால், சத்தியபிரகாசை தாயம் விளையாடிய தகராறின்போது பார்த்தீபனின் அண்ணன் அருள்சாமி கொலை செய்து விட்டார். இது எனக்கு வேதனையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சத்தியபிரகாசின் கொலைக்கு பழிக்குப்பழியாக பார்த்தீபனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.
அதன்படி, 10-ந் தேதி இரவு அவரது வீட்டிற்கு சென்று பார்த்தீபனை வெளியே அழைத்தேன். பின்னர் வெளியே வந்த அவரை நீள கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன். ஆனால், போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொலைக்கு கிருஷ்ணன் பயன்படுத்திய நீள கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கொலையில் அவருக்கு உடந்தையாக யாரேனும் இருந்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story