விடா முயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம்


விடா முயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம்
x
தினத்தந்தி 11 Aug 2017 11:07 PM GMT (Updated: 11 Aug 2017 11:07 PM GMT)

அணைக்கட்டை சேர்ந்த ம,பிரியங்கா சமீபத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் நேற்று அவர் அணைக்கட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அணைக்கட்டு,

அணைக்கட்டை சேர்ந்த ம,பிரியங்கா சமீபத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிப் பெற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். இந்த நிலையில் நேற்று அவர் அணைக்கட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் ஊக்குவிக்கும் வகையில் பதில் அளித்தார். அப்போது மாணவிகளிடம் அவர் பேசுகையில், ‘‘நான் அரசு பள்ளியில்தான் படித்தேன். என்னுடைய விடா முயற்சியால் ஆசிரியர் சொல்லும் பாடங்களை புரிந்து கொண்டு படித்தேன். கடந்த 2014–ம் ஆண்டு முதல் 3 முறை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினேன். அதில் நான் வெற்றிபெறவில்லை. விடா முயற்சியால் 4–வது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்று தமிழ்நாட்டில் 60 இடத்தை பிடித்துள்ளேன்.

நான் ஐ.ஏ.எஸ்.பயிற்சிக்காக வருகிற 28–ந் தேதி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்கிறேன். அங்கு எட்டு மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. நீங்களும் அது போல் விடாமுயற்சியுடன் படித்து முன்னேற வேண்டும்’’ என்றார்.

பின்னர் அவருக்கு அணைக்கட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலாவாணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாரதி ஆகியோர் பள்ளியின் சார்பாக நினைவு பரிசை வழங்கினர்.Next Story