ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் அம்மன் சிலை மீட்பு
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணா கால்வாயில் தேங்கி நின்ற மழை நீரில் தூன்டில் போட்டு மீன் பிடித்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை,
அப்போது தூண்டிலில் ஏதோ ஒரு பொருள் சிக்கி கொண்டது. பெரிய மீனாக இருக்கும் என்ற ஆசையில் வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அதை வெளியே எடுத்தனர். அப்போது அது சிலை என்பது தெரிய வந்தது.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப்–இன்ஸ்பெக்டர் மணி மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிலையை மீட்டனர்.
போலீசார் விசாரணைபின்னர் சிலையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 2 அடி உயரத்தில் உள்ள அந்த சிலை செம்பால் ஆன அம்மன் சிலை என்பது தெரிய வந்தது. மிகவும் பழமையான அந்த சிலை கிருஷ்ணா கால்வாயில் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சென்னையில் உள்ள தொல் பொருள் ஆராய்ச்சி கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்த பிறகுதான் சிலை எந்த நு£ற்றாண்டை சேர்ந்தது என்பது தெரிய வரும்.