நண்பர்களுடன் மது அருந்திய பெயிண்டர் மர்ம சாவு அடித்துக்கொலை செய்யப்பட்டாரா?
சேத்துப்பட்டில் நண்பர்களுடன் மது அருந்திய பெயிண்டர் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு ஜோதி அம்மாள் நகரை சேர்ந்தவர் பட்டு என்கிற பார்த்திபன் (வயது 27), பெயிண்டர். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் சமீபத்தில் தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள கூவம் கரையோரம் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் பார்த்திபன் நேற்று காலை பிணமாக கிடந்தார்.
முன்விரோதம் காரணமா?
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில்வே ஊழியர் தற்கொலை
* பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக, சூளையை சேர்ந்த கணேஷ் (58) கைது செய்யப்பட்டார்.
* யானைகவுனி, பூக்கடை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக, சவுகார்பேட்டையை சேர்ந்த தீபக் (28), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ஜாகீர்உசேன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* வீட்டின் அருகே உள்ள சாலை ஓரத்தில் குப்பை கொட்ட வந்த ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கவிதா (30) என்பவரிடம் 6 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்துச்சென்றனர்.
* பட்டாபிராமில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த வேலூர் மாவட்ட வாலாஜா பகுதியை சேந்த ரெயில்வே ஊழியர் சண்முகம் (41) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* ஆதம்பாக்கம் பாரத்நகரில் சாலையோரம் நின்ற சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல சுகாதார ஆய்வாளர் சுபாஷினியிடம் (28) மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.
* கோயம்பேடு 100 அடி சாலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே உள்ள பூங்காவில் குப்பை சேகரிக்க வந்த மாநகராட்சி குப்பை லாரியில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Related Tags :
Next Story