தர்மபுரி மாவட்டத்தில் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோ.வி.சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மல்லன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி நிஜாமுதீன், தமிழக விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சின்னசாமி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் இயற்கை நீர்வளப்பாதுகாப்பு இயக்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 16-ந்தேதி காலை 10 மணிக்கு தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலாண்மை வாரியம்
தமிழக விவசாயிகள் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். தர்மபுரி நகராட்சி குடிநீரில் கொசுவால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் தூர்வார வேண்டும். காவிரிடெல்டா பாசன பகுதியை சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். உரம், பூச்சி மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், முரளி, ஆதிதமிழர் பேரவை நிர்வாகி சிவன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி பைரோஸ், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நிர்வாகி ராஜா மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏலகிரி நடராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story