ஓட்டல் உரிமையாளர் அரிவாள் வெட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் வெறிச்செயல்
திருவையாறு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் ஊருக்குள் புகுந்து ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டினார்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் பாலக்கரை அருகே மெயின்ரோட்டில் ஓட்டல் நடத்தி வருபவர் ராஜாங்கம் மகன் சந்தனகுமார் (வயது34). இவருடைய அண்ணன் முனியப்பன் மகளை கடந்த மாதம் புதுஅக்ரஹாரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வகார்த்தி(34) என்பவர் கிண்டல் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரின் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகார்த்தியை கைது செய்து திருவையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். இந்தநிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து செல்வகார்த்தி தப்பி ஓடி விட்டார்.
நேற்று அதிகாலை செல்வகார்த்தி மற்றும் கூலிப்படையினர் 2 பேர் ஒரு காரில் சந்தனகுமாரின் ஓட்டலுக்கு வந்து ஓட்டலில் இருந்த சந்தனகுமார், ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த பொன்னாவரையை சேர்ந்த மாணிக்கம் மகன் சங்கர்(30) ஆகிய இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி பொன்னாவரைக்கு சென்று காவிரி கரை ஓரம் நான்கு கால் மண்டபத்தில் அமர்ந்திருந்த சந்தனகுமாரின் உறவினர் பொன்னாவரையை சேர்ந்த மூர்த்தி (45) என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்று விட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சந்தனகுமார், மூர்த்தி, சங்கர் ஆகிய 3 பேரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது குறித்து சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகார்த்தி மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் கூலிப்படையினருடன் சேர்ந்து காரில் வந்து 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் திருவையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய போதே செல்வகார்த்தியை போலீசார் கைது செய்து இருந்தால் தற்போது இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது என்று சந்தனகுமாரின் குடும்பத்தினர் சம்பவ இடத்தில் கதறி அழுதனர்.

Related Tags :
Next Story