திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்


திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:00 AM IST (Updated: 13 Aug 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

மருங்கூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஆர்.எஸ்.மாத்தூர்,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, மக்கள் நன்மை பெறும் விதமாக மகாபாரதம் பாடப்பட்டது. இரவு அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை திரவுபதி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து திரவுபதி அம்மன், தர்மர், பீமர், அர்சுணன், நகுலன், சகாதேவன், காளி உள்ளிட்ட தெய்வங்கள் தனித்தனி சப்பரத்தில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்திற்கு எழுந் தருளினர். இதையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீ மிதித்தனர். தீ மிதி திருவிழாவில் மாத்தூர், துளார், குறிச்சிகுலம், கொடுக்கூர், கூவாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Tags :
Next Story