மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Aug 2017 3:30 AM IST (Updated: 13 Aug 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் 30–ந்தேதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு சார்பில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

காஞ்சீபுரம்,

இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட அளவிலான கைப்பந்து, நீச்சல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், வி.சோமசுந்தரம், மாவட்ட கல்வி அதிகாரி கார்த்திகேயன், மாவட்ட விளையாட்டு அதிகாரி அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெரிய காஞ்சீபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடுவர் அருள்மணி தலைமையில் நடந்த சிறப்பு பட்டிமன்றத்தையும் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடக்கி வைத்தார். இதில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story