சித்தராஜகண்டிகை, ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


சித்தராஜகண்டிகை, ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:00 AM IST (Updated: 13 Aug 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சியில் உள்ள பாப்பன்குப்பம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி,

சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா, வட்ட வழங்கல் அதிகாரி தாமோதரன், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த முகாமில் உதவித்தொகை தொடர்பாக 36 மனுக்களும், பட்டா தொடர்பாக 2 மனுக்களும் சேர்த்து மொத்தம் 38 மனுக்கள் பெறப்பட்டு அதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், இது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கிராம நிர்வாக அதிகாரி சிவசுப்பிரமணி வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலர் கர்ணன் நன்றி கூறினார்.

ஜி.சி.எஸ்.கண்டிகை

பள்ளிப்பட்டு ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரே‌ஷன்கார்டு, திருமண உதவித்தொகை, வீட்டு மனைபட்டா, ரே‌ஷன்கார்டில் பெயர் திருத்தம், பட்டா மாற்றம், சாதி சான்றிதழ், அரசு நலத்திட்ட உதவிகள் கேட்டு 100–க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

முகாம் முடிவில் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம். நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கனார். இந்த முகாமில் பள்ளிப்பட்டு தாசில்தார் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story