தாரமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


தாரமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 13 Aug 2017 3:45 AM IST (Updated: 13 Aug 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மிளகாய்காரனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்கிற விஜயகுமார் (வயது 48). கூலித்தொழிலாளி. கடந்த 2015–ம் ஆண்டு மே மாதம் 5–ந் தேதி அதே பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, மற்ற சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.

அப்போது அங்கு வந்த விஜயகுமார், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் கூறினாள். இதையடுத்து சிறுமியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் விஜயகுமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு கூறினார்.


Next Story