பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் பொன்விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பயிர்க்கடன், விவசாய நகைகடன், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், கறவைமாடு கடன் என முறையே 76 பேருக்கு 50 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் வருவாய்த்துறை மூலம் வீட்டுமனைபட்டா 42 பேருக்கும், முதியோர் உதவித்தொகை 50பேருக்கும் வழங்கப்பட்டது.
அதன்பின்னர் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர்த்தொட்டி அமைப்பதற்கான தொடக்கவிழா நடைபெற்றது. இந்த பணிகளையும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
இதில் ஈரோடு மண்டல இணைபதிவாளர் முருகன், கோபி சரக துணைபதிவாளர் தியாகராஜன், வங்கி முதன்மை வருவாய் அதிகாரி அழகிரி, கொங்கர்பாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வெங்கிடுசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஜேம்ஸ்வில்லியம் நன்றி கூறினார்.
விழாவுக்கு முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி நல்ல தீர்வு காணப்படும். பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story