திருப்பூரில் பாலப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை


திருப்பூரில் பாலப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2017 4:15 AM IST (Updated: 13 Aug 2017 4:09 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம் எதிரில் கட்டப்படும் பாலம், டி.எம்.எப். பாலம், எஸ்.ஆர்.சி. மில் பகுதி பாலம், மண்ணரை பகுதி பாலம், அணைக்காடு பகுதி பாலம் என பல இடங்களில் பாலப்பணிகள் தொடங்கப்பட்டு சில பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பழைய பஸ் நிலையம் அருகில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அருகில், பெருமாள் கோவில், அரசு மருத்துவமனை அருகில் என 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது, இதனால் பயணிகள் அலைக்கழிக்கப்படுவதுடன், கழிப்பிடம், நிழற்குடை இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். இது போன்ற அனைத்து பாலப்பணிகளையும் விரைந்து முடித்து திருப்பூரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story