தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 17–ந் தேதி (வியாழக்கிழமை) மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதையொட்டி, மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் 2 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளை கொண்டு மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் ஏற்கனவே தோண்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் பங்கேற்பதற்கு ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பினை அளிக்கலாம்.
இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளாச்சி அலுவலர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலம் அல்லது கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை 15–ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்து கொள்ளலாம்.பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவக்கூடிய இத்திட்டத்தில் அனைவரும் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story