நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அகில பாரத சத்ரிய மகா சபாவினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அகில பாரத சத்ரிய மகா சபாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:53 AM IST (Updated: 13 Aug 2017 4:53 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய சத்ரிய மகா சபாவினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத சத்ரிய மகாசபா சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய சத்ரிய மகாசபா அமைப்பின் புதுவை மாநில தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் ராமஜெயம், துணைத்தலைவர் பாஸ்கரன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் ஜெகன்நாதன், பூர்வகுடி மக்கள் பேரவை தலைவர் ரகுபதி உள்பட பல்வேறு சமூக இயங்கங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் உயர் அரசுப் பணிகளில் சேருவதற்கான பயிற்சி வகுப்புகளை அரசே நடத்த வேண்டும்.

புதுச்சேரி பூர்வகுடிகளான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெறுவதற்கான வெட்டறு தேதியினை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அரசாணை வெளியிட வேண்டும்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 50 சதவீதம் அரசு இடஒதுக்கீட்டை பெற சிறப்பு சட்டசபையை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story