புலம்பும் மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டியது..
புலம்பும் மனிதர்கள் சமூகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எதற்கெடுத்தாலும் புலம்புகிறவர்களாக இருக்கிறார்கள்.
புலம்பும் மனிதர்கள் சமூகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எதற்கெடுத்தாலும் புலம்புகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வேலைபார்ப்பவர்கள் என்றால், எல்லா வேலையும் தன் தலையிலே விழுவதாக புலம்புவார்கள். வீட்டிற்கு போனால் புதிய காரணங்களை கண்டுபிடித்து மனைவி யிடமும், குழந்தைகளிடமும் புலம்புவார்கள். இது ஆண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினை இல்லை. புலம்பு பவர்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள். முன்பெல்லாம் நடுத்தர வயதுக்கு பிறகு செயல்வேகம் குறைந்த நிலையில் இருப்பவர்களே புலம்பினார்கள். இப்போது இருபது வயதுகள் கூட புலம்பலோடுதான் முழுபொழுதையும் கழிக்கின்றன.
இப்படி புலம்புகிறவர்கள் மனஅழுத்தம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எதிலும் திருப்தியடையாதவர் களாகவும், ஏக்கங்கள் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்கள் பெரும்பாலும் நிம்மதியிழந்து தவிப்பார்கள்.
புலம்புகிறவர்கள் நிம்மதியாக வாழ சில வழிமுறைகள் இருக்கின்றன. நீங்களும் புலம்பும் ரகமாக இருந்தால் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து பாருங்கள்.
* உணவு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். சத்தான உணவை, அளவோடு, சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடுங்கள்.
* போதுமான நேரம் இரவில் தூங்கவேண்டியதும் அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவும் முன்வாருங்கள். நல்ல உணவும், போதுமான தூக்கமும் கிடைத்தால் உங்கள் மனதிற்கு பெருமளவு நிம்மதி கிடைத்துவிடும். புலம்பல் குறையும்.
* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உடலை மட்டுமல்ல, மனதையும் சரி செய்யும். யோகாசனம் செய்வதும் சிறந்தது.
* ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்காதீர்கள். இடைவேளையை உருவாக்கி அந்த வேலையில் இருந்து சிறிது நேரம் விடுபட்டு, சிறிது தூரம் நடக்கலாம். பாட்டு கேட்கலாம். விளையாடலாம்.
* எப்போதும் உங்கள் பிரச்சினைகளையே நினைத்து வேதனைப்படாமல் மற்ற மனிதர்களை திரும்பிப் பாருங்கள். இந்த உலகம் மிக பெரியது. ஒவ்வொருவர் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் கவனியுங்கள்.
* வீட்டிற்குள்ளேயோ, அலுவலகத்திற்குள்ளேயோ முழுநேரமும் அடைபட்டுக் கிடக்கவேண்டாம். உங்களுக்காக நல்ல பொழுதுபோக்கை கண்டுபிடியுங்கள்.
* கஷ்டப்படுகிறவர்களையும், வேதனைப்படுகிறவர் களையும் காணுங்கள். மாதத்தில் ஒரு நாள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுங்கள். மனவளர்ச்சி குன்றியவர்களோடு உங்களின் முடிந்த பொழுதை செல விடுங்கள்.
* மனது சரியில்லை என்று நினைக்கும்போது, முதல் வேலையாக இளம் சுடுநீரில் ஒரு குளியல் போட்டு புதிய ஆடை உடுத்திவிட்டு ஏதாவது ஒரு பூங்காவை நோக்கி நடையைகட்டுங்கள்.
* கண்ணீர் சிறந்த வலி நிவாரணி. சோகம், துக்கம் உங்களுக்குள் எல்லையற்று இருக்கும்போது சிறிது நேரம் அழலாம் என்று நினைத்தால் அழுதுவிடுங்கள். நம்பகமானவர்கள், தன்னம்பிக்கை தருகிறவர்களை பார்த்து பேசவேண்டும் என்று விரும்பினால் அவர் களைப் போய் பாருங்கள்.
* சிரிப்பதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர் களோடு சேர்ந்து சிரித்து பேசுவது மிகவும் நல்லது.
* சிறந்த நண்பர் ஒருவரையும், இருப்பதில் நல்ல உறவினர் ஒருவரையும் தேர்ந்தெடுத்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் துக்கம், சோகம் போன்றவைகளை எல்லாம் அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் உங்களால் யோசிக்க முடியாத அளவுக்கு புதிய விஷயங்களை அவர்கள் சொல்வார்கள். அதன் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
* தினமும் செக்குமாடு போன்று ஒரே மாதிரி வேலைகளை செய்யாதீர்கள். வாரத்தில் ஒரு நாளாவது உங்கள் வேலை முறையை மாற்றி அமையுங்கள். எல்லா நேரங்களிலும் இயந்திரங்களோடு பொழுதைக்கழிக்காதீர்கள்.
* சினிமாவுக்கு செல்வது, கோவிலுக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்று, உங்கள் மனதை உற்சாகப்படுத்தும் செயலில் ஈடுபடுங்கள்.
* யாருடைய வாழ்க்கையும் எப்போதும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்காது. நினைத்துப்பார்க்க நிறைய நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினைகள் ஏற்படும்போது அதையே நினைத்து வேதனைப்படாமல், உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைத்துப்பாருங் கள். சின்னச்சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடி, உங்களையே நீங்கள் உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.
* உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து, ‘எனக்கு என்ன குறை. நான் அழகாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் எல்லாம் முடியும்’ என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளை உச்சரியுங்கள். அதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுக்கு சிரிக்கும் முகம் இருந்தால் அது உங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பிடிக்கும். அதனால் சிரிக்க பழகுங்கள். கண்ணாடி முன்னால் நின்று சிரித்துப்பார்த்து, உங்கள் முகத்திற்கு எந்த சிரிப்பு பொருத்தமாக இருக்கிறதோ அதை உங்கள் முகத்தோடு எப்போதும் ஒட்டவைத்துக்கொள்ளுங்கள்.

Related Tags :
Next Story