மருத்துவ சமுதாயத்துக்கு 5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


மருத்துவ சமுதாயத்துக்கு 5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:30 AM IST (Updated: 14 Aug 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ சமுதாயத்துக்கு 5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை,

மருத்துவ சமுதாய சங்கமான ‘டீம்‘ அமைப்பின் 8–வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். செயலாளர் செல்வசூடாமணி வரவேற்று பேசினார். துணைத்தலைவர் ராஜேந்திரன் அறிக்கை வாசித்தார். டாக்டர் உமேஷ்சரோகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஓய்வுபெற்ற நீதிபதி பூபாலன் ஆண்டு விழா மலரை வெளியிட, டாக்டர் ராமலிங்கம், சண்முகம், பேராசிரியர்கள் கலியமூர்த்தி, அன்பானந்தன், சுப்பிரணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்த மாணவ–மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிச்சையா, ராமலிங்கம் ஆகியோர் பரிசு வழங்கி பேசினர்.

கூட்டத்தில் மருத்துவ சமுதாயத்துக்கு 5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தியாகி விசுவநாததாசுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும். அவருடைய வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும். ஆதிகாலத்தில் இருந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் தொழில் செய்து வரும் மருத்துவ சமுதாயத்தினருக்கு சித்த மருத்துவ படிப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story