பெரம்பலூரில் வக்கீல்களுக்கு புத்தாக்க பயிற்சி

பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் 50 வக்கீல்களுக்கு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் 2 நாள் புத்தாக்க பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். வக்கீல்கள் சுந்தர்ராஜ், முகமது இலியாஸ், சீனிவாசன், கருணாநிதி ஆகியோர் கருத்துரை ஆற்றினார். உயர் நீதிமன்ற வக்கீல் ரத்தினதாரா, வக்கீல்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நோக்கம், அதன் பணிகள் மற்றும் மக்கள் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் பயனாளிகளை சென்றடைய செய்யும் வகையில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து பயிற்சி அளித்தார். இதில் மாவட்ட குற்றவியல் நீதிபதி சஞ்சீவபாஸ்கர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியான வினோதா, பெரம்பலூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி மகேந்திரவர்மா, கூடுதல் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மோகனப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். 2-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5மணிவரை நடைபெற உள்ள பயிற்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதர்சனாசுந்தர் பயிற்சி அளிக்கிறார். பயிற்சி ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

Related Tags :
Next Story