மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
பெரம்பலூரில் நடைபெற்ற மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் ஆகஸ்டு மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கரன் தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து பிரிவினருக்கும் நடத்தப்பட்டுள்ளது. தடகளம், குழுப்போட்டிகளான கைப்பந்து, இறகுப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 15 பள்ளிகளிலிருந்தும், 6 கல்லூரிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான தடகளப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியை சேர்ந்த மாணவர் அகமதுகரீம் முதலிடத்தையும், 600 மீட்டர் ஓட்டத்தில் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர் ரமேஷ் முதலிடத்தையும், 2,000 மீட்டர் ஓட்டத்தில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் பிரேம்நாத் முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் ராஜதுரை, ஈட்டி எறிதல் போட்டியில் அய்யப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில் சிவநேசன், வட்டு எறிதல் போட்டியில் ஆனந்த்ராஜ் முதலிடத்தை பெற்றனர்.
பெண்களுக்கான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் மாணவி பீபி பாத்திமா முதலிடத்தையும், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 600 மீட்டர் ஓட்டத்தில் மாணவி பவானி, 2,000 மீட்டர் ஓட்டத்தில் மாணவி கிருத்திகா, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் மாணவி நாகப்பிரியா, வட்டு எறிதல், போட்டியில் குழலி, ஈட்டி எறிதல் போட்டியில் பிரியா ஆகியோர் முதலிடத்தையும் பெற்றனர்.
ஆண்களுக்கான குழுப்போட்டிகளில் கைப்பந்து போட்டியில் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அணியினர் முதலிடத்தையும், பெண்களுக்கான குழுப்போட்டிகளில் கைப்பந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் அணியினர் முதலிடத்தை பெற்றனர். ஆண்களுக்கான இறகுப்பந்து போட்டியில் எக்ஸ்-கைஸ்-அ-பெரம்பலூரை சேர்ந்த ஆண்கள் அணியினர் முதலிடத்தையும், பெண்களுக்கான இறகுப்பந்து போட்டியில் கேந்திரீய வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாணவி கவுசிகா முதலிடத்தை பெற்றார்.
ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியை சேர்ந்த 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல், போட்டியில் இளவரசன், 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் மருதமுத்து, 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் அகமதுகரீம், 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டி, 50 மீட்டர் பட்டர்பிளை போட்டிகளில் செட்டிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன், 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் அபிமன்யூ, 200 மீட்டர் இன்டிவிஜுவல் மிட்லே போட்டியில் ராம்குமார், 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் ரோவல் கல்லூரி மாணவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டிகளில் முதலிடத்தை பெற்றனர்.
பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் மகாதேவி, 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் கஸ்தூரி, 50 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் அனுசுயா, 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் நிவேதா ஆகியோர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் முதலிடத்தையும், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் ஜெயப்யூலா ஸெரீன், 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் சங்கீதா மற்றும் 200 மீட்டர் இன்டிவிஜுவல் மிட்லே போட்டியில் புனித ஜோஸப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கனிஸ்கா முதலிடத்தை பெற்றனர்.
அதைதொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராம சுப்பிரமணியராஜா பரிசு, சான்றிதழ்களையும் வழங்கினார். இதில் தடகள பயிற்றுனர் கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story