கானத்தூரில், தாயின் கண் எதிரே கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி


கானத்தூரில், தாயின் கண் எதிரே கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 14 Aug 2017 4:30 AM IST (Updated: 14 Aug 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

கானத்தூரில் தாயின் கண் எதிரே கடலில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பயாஸ். இவரது மகன் ‌ஷகரம்(வயது 20) இவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

‌ஷகரத்தை பார்ப்பதற்காக அவரது தாய் சபீரா சென்னை வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை ‌ஷகரம் அவரது நண்பர் அருண் மற்றும் தாய் சபீரா ஆகியோருடன் கானத்தூர் கிழக்கு கடற்கரைக்கு வந்தார். அங்கு தனது நண்பருடன் கடலில் குளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை இருவரையும் ஆழமான பகுதிக்கு இழுத்து சென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட அருண் உடனடியாக நீச்சலடித்து கரைக்கு வந்தார். தண்ணீரில் மூழ்கிய ‌ஷகரமும் சிறிது நேரத்திற்கு பின் மற்றொரு அலையால் கரைக்கு சேர்க்கப்பட்டார்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ‌ஷகரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story