ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:46 AM IST (Updated: 14 Aug 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 12–வது வார்டில் 5 ரே‌ஷன் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் ரே‌ஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் சாமுண்டிபுரம் ராஜிவ்நகரில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 12–வது வார்டு கிளை செயலாளர் நடராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், நடராஜன் ஆகியோர் பேசினார்கள். அப்போது ரே‌ஷன் பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்றும், பொருட்கள் வழங்குவது தொடர்பாக முறையாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும், பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இந்த முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொடிகளுடன் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயம், பனியன், விசைத்தறி, ஜவுளி தொழில் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயண பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story