நுண்ணறிவு போலீஸ் படையில் 1430 அதிகாரி பணியிடங்கள்


நுண்ணறிவு போலீஸ் படையில் 1430 அதிகாரி பணியிடங்கள்
x
தினத்தந்தி 14 Aug 2017 6:00 PM IST (Updated: 14 Aug 2017 1:12 PM IST)
t-max-icont-min-icon

நுண்ணறிவு போலீஸ் படையில் 1430 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மத்திய போலீஸ் படைப் பிரிவுகளில் ஒன்று இன்டலிஜென்ஸ் பீரோ. நுண்ணறிவு புலன் விசாரணைப் பிரிவான இதில், அசிஸ்டன்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபீசர் பணியிடங் களை நிரப்புவதற்கான ‘எக்சிகியூட்டிவ் தேர்வு 2017’ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வு மூலம் 1430 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 130 பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கானது. மீதியுள்ள 1300 பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவுக்கு 951 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 184 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 109 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 56 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அறிவு பெற்றிருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.

கட்டணம்:.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2-9-2017-ந் தேதியாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://mha.nic.in/vacancies, என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம். இது பற்றிய விவரங்கள் ஆகஸ்டு 12-18 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழிலும் வெளியாகி உள்ளது.

Next Story