குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு


குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 4:00 AM IST (Updated: 14 Aug 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு

குளச்சல்,

குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் செந்துறையை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 35), கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசில் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story