மணிமுத்தாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தல்
மணிமுத்தாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது
கல்லல்,
கல்லல் ஒன்றிய பா.ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் கல்லுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வக்கீல் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கோட்ட இணை பொறுப்பாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய இளைஞரணி தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிமுத்தாற்றில் அனுமதியின்றி மணல் அதிகமாக அள்ளப்படுவதால் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. எனவே மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்.
கல்லல் ஒன்றியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குடிநீர் மற்றும் தெருவிளக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story