புழல் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா


புழல் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 15 Aug 2017 3:30 AM IST (Updated: 15 Aug 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

புழல், லட்சுமிபுரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் 42-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

செங்குன்றம், 

சென்னையை அடுத்த புழல், லட்சுமிபுரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் 42-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு லட்சுமி பூஜையும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

மேலும், கோ பூஜை, திருவிளக்கு பூஜை, வெங்கட சுப்ரபாதம் ஆகியவையும் நடந்தது. 108 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சேஷாசலம் உள்பட பலர் செய்திருந்தனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 

Next Story