கடன் தொல்லையால் பாத்திரக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லையால் பாத்திரக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Aug 2017 4:30 AM IST (Updated: 15 Aug 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லியில் கடன் தொல்லையால் பாத்திரக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கெங்கவல்லி,

கெங்கவல்லி பேரூராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 48). இவர் வீட்டின் அருகே பாத்திரக்கடை வைத்திருந்தார். மேலும் அந்த கடைக்கு பின்னால் பாத்திரம் செய்யும் பட்டறையையும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பட்டறைக்கு வேலை செய்ய ஆட்களை அழைத்து வருவதற்காக தாராபுரத்தை சேர்ந்த புரோக்கர் ஒருவருக்கு முன்பணமாக சீனிவாசன் ரூ.5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த புரோக்கரும் சில ஊழியர்களை இவருடைய கடையில் வேலைக்கு சேர்த்தார். ஆனால் ஒரு மாதமே வேலை பார்த்த அந்த ஊழியர்கள் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனிடையே கடன் கொடுத்தவர்கள் சீனிவாசனிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 10-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். சரியான நேரத்தில் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதால் உயிர் பிழைத்தார். இந்தநிலையில் நேற்று காலை சீனிவாசன் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருடைய வீட்டுக்கு கடன் கொடுத்தவர்கள் சிலர் வந்து பணத்தை திரும்பி கேட்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சீனிவாசன் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story