நாமக்கல் கமலாலய குளம் ரூ.35 லட்சத்தில் தூர்வாரும் பணி தொடங்கியது எம்.எல்.ஏ. ஆய்வு
நாமக்கல் கமலாலய குளத்தை ரூ.35 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியை கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மலைக்கோட்டையின் அடிவார பகுதியில் கமலாலய குளம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் தற்போது மழை இல்லாத காரணத்தால் வறண்ட நிலையில் சேறும், சகதியுமாக காட்சி அளித்து வருகிறது. இதையடுத்து குளத்தை தூர்வாரி அழகுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கமலாலய குளத்தை தூர்வாரி அழகுப்படுத்தி, பூங்கா அமைக்கவும், நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கவும் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதற்கான பணியை சமீபத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்படி முதல்கட்டமாக கமலாலய குளம் தூர்வாரும் பணி பொக்லைன் எந்திரம் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :-
கமலாலய குளம் தூர்வாரி அழகுப்படுத்தும் பணியை நாமக்கல் நகரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவுக்கு முன்பு முடிக்க திட்டமிட்டு செய்து வருகிறோம். நாமக்கல்-திருச்சி சாலை ஆண்டவர் பெட்ரோல் விற்பனை நிலைய பஸ்நிறுத்தம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக நாமக்கல்- துறையூர் சாலையையும் பஸ்நிலையத்தில் இருந்து கொசவம்பட்டி ஏரி வரை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story